வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (18:01 IST)

"தலைவி" ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கங்கனா வெளியிட்ட வீடியோ !

ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
 
அதையடுத்து பெரும் பிரபலமான நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். கூடவே நிறைய சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது விமர்சனத்திற்கு உள்ளாவார். பாலிவுட் திரை நட்சத்திரங்களை வெளிப்டையாக வெளுத்து வாங்கும் கங்கானாவை ஒன்று கூடி அனைவரும் வெறுப்பது மக்களுக்கு தெரியும். 
 
இதனால் இவர் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கானாவின் பங்களாவை சட்டவிதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
 
இந்த வழக்கு விவசாரணைக்கு வந்தபோது  மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்து அதே இடத்தில் கங்கனா மீண்டும் கட்டிடம் கட்டிகொள்ளலலாம் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அவர் தற்ப்போது நடித்து வரும் தலைவி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில், "ஒரு தனிநபர் அரசாங்கத்திற்கு எதிராக நின்று வெற்றி பெறும்போது, அது தனிநபரின் வெற்றி அல்ல, ஆனால் அது ஜனநாயகத்தின் வெற்றி. என்னுடைய உடைந்த கனவுகளை பார்த்து சிரித்து எனக்கு தைரியம் அளித்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் வில்லனாக இருப்பதால் தான் நான் ஒரு ஹீரோயினாக இருக்க முடிகிறது." என அந்த பதிவில் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.