செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (16:59 IST)

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

muralidharan
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' முரளிதரன் காலமானார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து அவர் காலமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
'லட்சுமி மூவி மேக்கர்ஸ்' முரளிதரன் தயாரிப்பில் அன்பே சிவம், பகவதி, தாஸ், புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்கள் உருவாகின என்பதும் இவரது தயாரிப்பில் உருவான பல திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்த பல திரையுலக பிரபலங்கள் கும்பகோணம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran