1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (18:32 IST)

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட அறிவிப்பு: தயாரிப்பாளர், இயக்குனர் யார்?

Hip Hop Tamila
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க்கவுள்ளது. இந் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்ற படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran