செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (09:06 IST)

வாரிசு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்…! பின்னணி என்ன?

வாரிசு படத்தை சங்கராந்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய தில் ராஜு முயற்சி செய்து வருகிறார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைவருக்குமான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தெலுங்கில் வாராசடு என்ற பெயரில் சங்கராந்தி(பொங்கலின் போது) பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தில் ராஜு முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கராந்தியை முன்னிட்டு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவைக் காட்டி வாரிசு தெலுங்கில் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆவதை தடுக்க முற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் பண்டிகை நாட்களின் போது நேரடி தெலுங்கு படங்களுக்குதான் திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டுமென முடிவெடுத்ததே அப்போது தலைவராக இருந்த தில் ராஜு தலைமையில்தானாம்.