வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (16:22 IST)

ஜிகர்தண்டா 2 படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா? லேட்டஸ்ட் தகவல்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படம் பல்வேறு மொழிகலீல் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்தார்.  ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை இந்தியில் அந்த திரைப்படம் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கதிரேசனுக்கும் கார்த்திக் சுப்பராஜுக்கும் ஜிகர்தண்டா படத்தின் உருவாக்கத்தின் போது பிரச்சனை ஏற்பட்டு அதனால் இருவரும் மோதிக்கொண்டனர்.

கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கிய இறைவி படத்தில் கூட கதிரேசனை இழிவு செய்து ஒரு கதாபாத்திரம் உருவாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இருவரும் பழைய பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜி ஸ்டுடியோஸ் வழங்க, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கார்த்திக் சுப்பராஜ், முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்தும் சம்மந்தம் இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.