இன்னும் நின்னு வெடிக்கும் குட்டி பட்டாஸ்… 200 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை!
சமீபகாலமாக இணையத்தில் பல தனித்தமிழ் பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியான குட்டி பட்டாஸ் பாடல் தற்போது 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
அஸ்வின் மற்றும் ரெபோ மோனிகா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, அ ப ராசா வரிகளை எழுதியிருந்தார். ஒரு கல்யாண வீட்டில் காதலன் ஒருவன் செல்லக் கோபத்தில் இருக்கும் தன் காதலியை சமாதானப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது இந்த பாடல்.
ரிலீஸானதில் இருந்தே இந்த பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வந்த நிலையில் 100 மில்லியன், 150 மில்லியன் எனக் கடந்து தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.