திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (14:36 IST)

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்
விஜயகாந்த்  பற்றி எவ்வளவு பேசினாலும் பேசிக் கொண்டே போகலாம். நாக்கை நீட்டி பேசுவார், கோபத்தில் அடிப்பார் என்பதையும் தாண்டி அவருடைய கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும் என்பதே உண்மை. எதையும் தைரியமாக பேசுபவர். சூழ் நிலையை தைரியமாக எதிர்கொள்பவர். இப்படியிருக்கும் சூழ் நிலையில் விஜயகாந்தின் இறப்பு சினிமாவிற்கு ஒரு பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
 
அவர் மட்டும் உடல் நலம் நன்றாக இருந்து இன்று நம்மிடையே இருந்திருந்தால் அரசியலில் பெரும் மாற்றமே நிகழ்ந்திருக்கும். ஆனால் அவர் இருக்கும் போது மக்களும் விஜயகாந்தை பயன்படுத்த தவறிவிட்டார்கள். இருக்கும் போது சில பேரின் அருமை தெரியாது. அவர்கள் போன பிறகுதான் அருமை தெரியும் என்று சொல்வார்கள். அப்படித்தான் விஜயகாந்த் விஷயத்திலும் நடந்தது.
 
இப்படி நல்ல மனசுக்கு சொந்தக்காரராகத்தான் விஜயகாந்த் வாழ்ந்தார். அவர் இல்லாவிட்டாலும் இன்று வரை அனைவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் காஜா மொகைதீன் விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். விஜயகாந்தை வைத்து வாஞ்சிநாதன் என்ற படத்தை எடுத்தவர்தான் காஜா மொகைதீன்.
 
அந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் பேரரசு என்ற படத்தையும் எடுத்தார். பேரரசு படமும் வேட்டையாடு விளையாடு படத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டிருந்தாராம் காஜா மொகைதீன். அதனால் பொருளாதார ரீதியாக கொஞ்சம் கஷ்டபட்டிருக்கிறார் காஜா மொகைதீன். இதனால் பேரரசு படத்தின் டப்பிங் பணியை  நிறுத்தி வைத்தாராம் காஜா மொகைதீன். ஏனெனில் டப்பிங் பணிகள் முடிக்க வேண்டுமென்றால் நடிகர்களுக்கு முதலில் சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதனால் விஜயகாந்த் டப்பிங் முடிக்க வேண்டுமென்றால் அவருக்குண்டான சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
 
ஆனால் அதற்கு காஜா மொகைதீனிடம் பணம் இல்லையாம். அதனால்தான் டப்பிங்கை நிறுத்தி வைத்திருக்கிறார். இதை அறிந்த விஜயகாந்த் நேராக அவரே டப்பிங் தியேட்டரை ரெடி செய்து காஜா மொகைதீனை அங்கு வரச் சொல்லியிருக்கிறார். இப்படியான ஒரு நடிகர் இனி கிடைப்பதே அரிது என காஜா மொகைதீன் கூறினார். மேலும் அந்த படப்பிடிப்பில்தான் கேரவனை வரவழைத்தாராம் காஜா மொகைதீன்.
 
நேராக விஜயகாந்திடம் ‘கேப்டன், கேரவன் இருக்கு. வேணும்னா அங்கு போய் மேக்கப் போட்டு உட்காந்து கொள்ளுங்கள்’ என கூறியிருக்கிறார் காஜா மொகைதீன். உடனே விஜயகாந்த் கோபமாகி நான் வேலை செய்ய வந்திருக்கிறேனா? இல்ல சும்மா உட்கார வந்திருக்கிறேனா? இங்கு ஒன்னு நான் இருக்கணும். இல்ல அந்த கேரவன் இருக்கணும்னு சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் கேரவனை அங்கிருந்து அகற்றியிருக்கிறார்கள்.