திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2025 (10:38 IST)

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64வது நாளை அடைந்துள்ளது. பிரஜின் நேற்று வெளியேறிய நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் சுற்று காட்சிகள் இன்றைய முதல் புரோமோவில் இடம்பெற்றுள்ளன.
 
போட்டியாளர்கள் பலரும் ரம்யாவை நாமினேட் செய்தனர். "ஆரோக்கியமாக கேம் விளையாடவில்லை," "கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்," மற்றும் "அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்" போன்ற காரணங்களை முன்வைத்து ரம்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
 
இதற்கிடையில், திவ்யா போட்டியாளர் கம்ருதீனை நாமினேட் செய்து, அவர் பார்வதி மற்றும் அரோராவை வைத்து ஒரு விளையாட்டை விளையாடுவதாக குறிப்பிட்டார். 
அதேபோல், சுபிக்ஷா போட்டியாளர் சபரியை நாமினேட் செய்து, அவர் தன்னை 'மிகவும் நல்லவர்' போல வெளிப்படுத்திக் கொள்வதாக விமர்சித்தார். இந்த நாமினேஷன் சுற்று, வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையேயான மோதல்களை அதிகரித்துள்ளது.
 
Edited by Mahendran