மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..
நடிகர் சிம்பு திடீரென மலேசியாவுக்கு சென்று அங்க கார் ரேஸில் இருந்த நடிகர் அஜித்தை சந்தித்த விஷயம்தான் தற்போது சமூகவலைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சிம்பு ரசிகர்களாலும் அஜித் ரசிகர்களாலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அஜித் மலேசியா வந்து நான்கைந்து நாட்களாக ஆகிவிட்டது. ஏற்கனவே அவர் மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலில் சாமி கும்பிடும் வீடியோ வெளியானது. அதோடு, அஜித் அங்கு சென்றதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பல நாடுகளிலும் நடந்த கார் ரேஸில் அஜித் கலந்து கொண்டார். அடுத்த ரேஸ் மலேசியாவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காகதான் முக்கியமாக அஜித் அங்கே சென்றார்.
அதோடு, அவரை வைத்து விளம்பர படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். மேலும், அஜித் தொடர்பான டாக்குமென்டரி படம் ஒன்றையும் இயக்குனர் ஏ.எல் விஜய் அங்கு உருவாக்கி வருகிறார். இந்நிலையில்தான் அஜித் - சிம்பு சந்திப்பு நடந்திருக்கிறது.
அதேபோல் நான் தல ரசிகன் என சிம்பு பல வருடங்களுக்கு முன்பே பேட்டி கொடுத்தார். துபாயில் இருந்த சிம்பு ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா சென்றார். அஜித் மலேசியாவில் இருப்பது தெரிந்ததும் அவரை சந்திக்க நினைத்தார். அதுதான் இருவரின் சந்திப்பாக தற்போது மாறியிருக்கிறது.