11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் நஸிரியா ரி எண்ட்ரி!
தமிழ் சினிமாவையே உலுக்கிய முதல் கொலை வழக்கு என்றால் அது லஷ்மிகாந்தன் கொலை வழக்குதான் என்று சொல்லலாம். பத்திரிக்கையாளரான லஷ்மிகாந்தன் சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பல கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தார். அதில் பல தகவல்கள் அப்பட்டமான பொய் என்று குற்றம் சாட்டப்பட்டன.
இந்நிலையில் இவர் மர்மமான முறையில் கொல்லப்பட நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகள் இல்லை என நிருபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால் கைதுக்கு பின்னர் இருவரும் சினிமா வாழ்க்கை தேய்பிறையாக சென்று முடிந்தது.
இந்நிலையில் இப்போது இந்த லஷ்மிகாந்தனின் கொலையை பற்றி தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் பெற்ற இயக்குனர் சூர்யபிரதாப் இந்த தொடரை இயக்குகிறார். இந்த தொடருக்கு “தி மெட்ராஸ் மிஸ்டரி- தி ஃபால் ஆஃப் அ சூப்பர் ஸ்டார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸை பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் சோனி லிவ் தளத்துக்காகத் தயாரிக்கிறார். இந்த சீரிஸில் மையக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடித்துவருகிறார். இதன் மூலம் நய்யாண்டி படத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.