நல்லதுக்கே காலமில்ல.. உதவும் உள்ளத்தால் KPY பாலா காதலில் விரிசல்?
சமீப காலமாக பல ஏழை மக்களுக்கு வாரி வழங்கி உதவி செய்து வரும் கலக்கப்போவது யாரு பாலாவின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.
விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.
குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் பாலா செய்யும் உதவிகளில் இனி தானும் இணைந்து கொள்வதாக நடிகர் லாரன்ஸ் சமீபத்தில் அறிவித்தார். இருவரும் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்த வீடியோவும் வைரலானது.
ஆனால் பாலாவின் இந்த உதவும் உள்ளமே அவரது காதலுக்கு வில்லனாக மாறியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது அவருக்கு தெரிந்த வட்டாரங்களில்.. பாலா ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் கூட சொல்லியிருந்தார்.
ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அப்படி வாய்ப்பு கிடைத்து வரும் வருமானத்தையும் மொத்தமாக இப்படி ஊருக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாரே என அவருக்கு பெண் தர யோசிக்கிறார்களாம் பாலாவின் காதலியின் பெற்றோர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாலா இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களுக்கு உதவி செய்ததால் பாலாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K