வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (11:34 IST)

சைக்கிளுக்கு கூட வழியில்ல.. கண்ணீர் விட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்! – KPY பாலா செய்த உதவி வைரல்!

KPY Bala
சைக்கிள் கூட வாங்க முடியவில்லை என வருந்திய பெட்ரோல் பங்க் ஊழியரின் வீடியோ வைரலான நிலையில் அவருக்கு புது பைக் வாங்கி தந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நகைச்சுவை டிவி பிரபலம் KPY பாலா.



விஜய் டிவியில் பல காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர் KPY பாலா. சமீபமாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு தாண்டி ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் உதவிகளால் மேலும் பிரபலமடைந்தவர்தான் KPY பாலா. குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி, முதியவர்களுக்கு இலவச ஆட்டோ சேவை, வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி என பல உதவிகளை KPY பாலா செய்துள்ளார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு Vlog செய்பவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்புவார். அப்போது அவரியம் இருக்கும் கேமராவை பார்த்து அது எவ்வளவு என்று பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞர் கேட்பார். விலை 49 ஆயிரம் என்றதும், தனது வீட்டில் ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் ரூ.10 ஆயிரத்தில் வாங்கி கேட்பதற்கே செருப்பால் அடிப்பேன் என திட்டுவதாகவும், ஒரு சைக்கிளுக்கு கூட தனக்கு வழியில்லை என்றும் வருத்தத்துடன் சொல்வார்.


இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த இளைஞருக்கு உதவ நினைத்த KPY பாலா, ஒரு புதிய பைக்கை வாங்கி சென்று அந்த இளைஞரை பெட்ரோல் பங்கில் பார்த்து பரிசளித்துள்ளார். KPY பாலாவின் இந்த உதவியால் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த அந்த இளைஞர் பாலாவை அணைத்து கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் KPY பாலாவின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K