செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (19:22 IST)

மொட்டை மாடியில் ஒற்றை சுவர் மீது டான்ஸ் ஆடிய KPY பாலா - வீடியோ!

திறமை இருப்பவர்கள் விஜய் டிவிக்கும் நுழைந்தால் எப்படியாவது முட்டி மோதி வளர்ந்து உச்ச நட்சத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படித்தான் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா.
 
இவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் பாலா. 
 
இவரது ஸ்பெஷல் திறமையே டைமிங் காமெடி மூலம் பலரையும் சிரிக்க வைப்பது தான். இந்நிலையில் பாலா மொட்டை மாடியின் ஒற்றை சுவர் மீது ஆபத்தான முறையில் அசால்ட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் பதற்றத்தை கொடுத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bj Bala (@bjbala_kpy)