புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (19:17 IST)

பட்டயகிளப்பும் "கனா" தெலுங்கு ரீமேக் டீசர்!

அருண்ராஜா காமராஜ்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 
 
பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 
 
கோலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற கனா திரைப்படம் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது  இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. 
 
ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திலும் தமிழை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.