செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (15:21 IST)

விஜயலட்சுமியின் வாழ்க்கையை கெடுத்த சிவகார்த்திகேயன்: நியாயம் கேட்டு போராடும் கணவர்!

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக கூறிய விஜயலட்சுமி என்னும் திருமணமான பெண்ணை வங்கியில் பணிபுரிந்து வந்த நபர் மற்றும் பலர் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
காதல் திருமணம் செய்துக்கொண்ட விஜயலட்சுமி - வசந்தகுமார் தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆண் பிள்ளை வேண்டும் என்ற காரணத்தினால் 3வது முறையாக கருவுற்று இருந்த போது கடு கலைந்து மருத்துவ சிகிச்சைக்காக வட்டிக்கு பணம் வாங்கியிருந்தனர். 
 
வாங்கிய கடனை திருப்பி அடைக்க கேரள மாநிலம் கொல்லத்திற்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றார் வசந்த குமார். விஜயலட்சுமி தனது மகள்களுடன் சங்கராபுரம் அருகே வசித்து வந்தார். விஜயலட்சுமி தனது வீட்டில் அருகில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு ஒன்ரை துவங்கி அதில் கணவர் அனுப்பும் பணத்தை எடுத்து வந்தார். 
இந்நிலையில் விஜயலட்சுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அந்த வங்கியில் பணிபுரிந்த சிவகார்த்திகேயன் என்பவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்துக்கொண்டான். அந்த வீடியோவை காட்டி சிவகார்த்திகேயன் பல முறை பலாத்காரம் செய்ததோடு, வங்கியில் தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் விஜயலட்சுமியை இரையாக்கியுள்ளான். 
 
இந்த கொடுமையை தனது உறவினரிடம் கூறி உதவி கேட்ட விஜயலட்சுமியை அந்த உறவினரும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து தனது நண்பர்களை அழைத்து வந்த அனைவருடனும் விஜயலட்சுமியை உறவுகொள்ள வைத்துள்ளான். 
இது குறித்து விஜயலட்சுமியின் கணவருக்கு தெரியவர போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீஸார் புகாரை ஏற்காமல் அலைகழித்த நிலையில், விஜயலட்சுமியை தவறாக பயன்படுத்திய அனைவரையும் ஆதாரத்துடன் வேறு ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இந்த முறை புகார் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தனியார் வங்கி துணை மேலாளர் மற்றும் அந்த உறவினரை கைது செய்துள்ளனர். மேலும் விஜயலட்சுமியை பலாத்காரம் செய்த 10 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.