புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (11:44 IST)

சுய இன்ப காட்சியில் நடித்த சர்ச்சை நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடி

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படுதோல்வியை தழுவியதால் கதைத்தேர்வுகளில் அதிக கவனத்தை செலுத்திவருகிறார். அடுத்ததாக தன்னை சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பேமிலி ஆடியன்ஸிற்கு பிடிக்கும் வகையிலும் , அனைத்து தரப்பிற்கும் பிடிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து தன் நண்பர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில்  தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
 
சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கியாரா அத்வானி சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதாக வந்துள்ள தகவலால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. தொடர்ந்து தோல்வியை தழுவிவரும் சிவகார்த்திகேயன் உறுதியான வெற்றியை தந்து விட கடுமையாக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல கம் பேக்காக அமையட்டும்.