இளையராஜாவை பங்கமாக கலாய்த்த எஸ்.கே பட இசையமைப்பாளர்!

Last Updated: செவ்வாய், 4 ஜூன் 2019 (15:40 IST)
இந்திய சினிமாவில் உள்ள இசைஆளுமைகளில் முக்கியமானவரும்,  தமிழ் சினிமாவில் இசை ராஜாங்கமே நடத்தியவர் இளையராஜா. அவர் நிகழ்த்திய சாதனைகளை யாராலும் மறக்க முடியாது. ஆனால் சமீப காலமாக அவர் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகிவருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்றில் தண்ணீர் கொடுக்க வந்த பாதுகாவலரை இளையராஜா கடுமையாக திட்டியதால் அந்த நபர் மேடையிலேயே இளையராஜாவின் காலில் விழுந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. 

இந்த நிலையில்  சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பிளாக் ஷீப் குழுவினர் இணைந்து உருவாகியுள்ள ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ இசையமைப்பாளரான சபீர், இளையராஜாவை குறித்து கிண்டலாக பதில் அளித்துள்ளார். பத்திரிகையாளர் ஒருவர் ‘இந்த படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியுள்ளீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சபீர் ‘ஆண்மை இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்களே’ என்று கூற அரங்கமே கலகலவென சிரித்தது. பின்னர் ஆம், நான் இரண்டு இளையராஜா பாடல்களை பயன்படுத்தியுள்ளேன் என்று சிரித்தபடியே கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :