புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (06:03 IST)

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்த சிவகார்த்திகேயன் - அனிருத்

நேற்று இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் பார்த்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடந்து ஒருசில ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியை நேரில் கண்டு ரசிக்க தமிழ் திரையுலகினர் பலர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர்களும் அடங்கும். நேற்று போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மைதானத்தில் சிவகார்த்திகேயன், அனிருத் இருவரும் செல்பி எடுத்து கொண்டு புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் காண்பது ஒரு அற்புதமான அனுபவம் என்றும், இந்தியா மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேபோல் அனிருத்தும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'வெற்றி நமதே', இந்த நாளை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், அனிருத் பதிவு செய்த இந்த இரு டுவீட்டுக்களுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதேபோல் இந்த போட்டியை பிரபல நடிகை ரகுல் ப்ரித்திசிங்கும் நேரில் கண்டு ரசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது