வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (21:55 IST)

’விக்ரம் 58’ படத்தின் நாயகி அறிவிப்பு

சியான் விக்ரம் நடித்து வரும் அடுத்த படமான ‘விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை இயக்கி வரும் அஜய் ஞானமுத்து கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் நாயகியை தேர்வு செய்வதில் பிஸியாக இருந்தார். சுமார் நான்கு முன்னணி நடிகைகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது அவர் ஸ்ரீநிதிஷெட்டி இந்த படத்தின் நாயகியாக தேர்வு செய்துள்ளார். இது குறித்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
ஸ்ரீநிதிஷெட்டி கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட துறைகளில் வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பதாக வந்த செய்தியால் இந்த படத்தின் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது ஸ்ரீநிதிஷெட்டி இந்த படத்தில் இணைந்துள்ளது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது
 
இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ஏற்கனவே மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது