வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (07:51 IST)

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய ‘குபேரா’… எவ்வளவு தெரியுமா?
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் நேற்று பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா என பேன் இந்தியா நடிகர்கள் இருப்பதால் இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதனால் கலவையான விமர்சனங்கள் மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றைத் தாண்டியும் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இந்திய அளவில் இந்த படம் முதல் நாளில் 13 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக ஆன்லைன் ட்ராக்கிங் தளமான sacnilk வெளியிட்டுள்ளது. இது தனுஷின் சமீபத்தையப் படங்களில் அதிகபட்ச ஓபனிங் என்று சொல்லப்படுகிறது.