துருவ் விக்ரமின் ‘வர்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (11:32 IST)

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘வர்மா’ என்ற திரைப்படம் துருவ் விக்ரம் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் வர்மா’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்ததோடு இந்த படத்தை வேறொரு இயக்குனருடன் ஒப்படைத்து மீண்டும் உருவாக்க கோரினார்

இதனையடுத்து இந்த படம் கிரிசாயா என்ற இயக்குனரின் இயக்கத்தில் ’ஆதித்ய வர்மா’ என்ற டைட்டிலில் உருவாகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

’ஆதித்ய வர்மா’ திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமின் திரையுலக பயணம் வெற்றியுடன் தொடங்குமா? என்பதை நவம்பர் எட்டாம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

துருவ் விக்ரம் ஜோடியாக பனிதா சாந்து நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ராதன் இசையில் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :