1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:48 IST)

’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு எப்போது? அஜய்ஞானமுத்து தகவல்

நடிகர் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் விமல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகாவீர் கர்ணன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் நிலை என்ன என்பது குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை
 
 
இந்த நிலையில் ’டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாததால் விக்ரம் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர் 
 
 
இந்த நிலையில் சற்று முன்னர் அஜய்ஞானமுத்து, விக்ரமின் 58வது படமான விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு வரும் நான்காம் தேதி முதல் தொடங்கும் என்றும், அதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக கூறியுள்ளார். இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 
 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் ஒன்றரை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
 
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நாயகி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.