திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (14:00 IST)

ஜேசுதாஸ் பாடலை பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த டகர்.!

singer dead
ஜேசுதாஸ் பாடலை பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த டகர்.!
பிரபல பாடகர் ஒருவர் மேடையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜேசுதாஸ் பாடலை பாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்றை பின்னணி பாடகர் எடவா பஷீர் என்பவர் பாடிக் கொண்டிருந்தார்
 
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை அடுத்து உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
 
78 வயதான அவரின் மறைவுக்கு இசை உலகம் தனது இரங்கலை தெரிவித்து வருகிறது