1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (20:30 IST)

லடாக்கில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Edappadi
லடாக்கில் இந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதை எடுத்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
 
இந்த சம்பவத்திற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் பயணித்த வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நாட்டை காக்கும் நற்பணியில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.