வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (19:26 IST)

கள்ளச்சாராயம் அருந்தியதில் 6 பேர் உயிரிழப்பு ; 12 பேருக்கு சிசிக்சை

dead
கள்ள சாராயம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலங்களின் சென்று மது குடிப்பதும் கள்ளச்சாராயம் குடிப்பதிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது 
 
போலி மதுபாட்டில்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது