இந்த அளவுக்கு ஒருவர் புகழ் பெற முடியுமா? விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட எம்எல்ஏ
ஒரு இளைஞர் இந்த அளவுக்கு புகழ் பெற முடியுமா? என ஆச்சரியப்பட்டு பேட்டி ஒன்றில் எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே. குறிப்பாக நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் விஜய்க்கு என ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரள மாநில எம்எல்ஏ ஜார்ஜ் என்பவர் விஜய் குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறிய போது ’நான் சின்ன வயதில் இருந்தே தமிழ் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. தற்போது பிசி காரணமாக தொலைக்காட்சியில் மட்டுமே படம் பார்க்கிறேன். அதுவும் விஜய் படம் மட்டுமே பார்க்கிறேன்
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் சங்கம் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற போதுதான் விஜய்க்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பதை நேரில் பார்த்து தெரிந்துகொண்டேன். இந்த வயதில் ஒருவர் இவ்வளவு புகழை அடைய முடியுமா? என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அப்போதுதான் விஜய தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்
பின்னர் விஜய் குறித்து நிறைய விசாரித்தபோது அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதர் என்றும், சமூக சேவகர் என்றும், இரக்க குணமுள்ளவர் என்றும், ரசிகர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே ஓடி வந்து அதை தீர்த்து வைப்பவர் என்பதையும் அறிந்து கொண்டேன். நடிகர் விஜய் நீண்ட காலம் நல்லபடியாக வாழ கடவுள் ஆசீர்வதிப்பார் என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்