வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:45 IST)

விஜய் பட வில்லனுக்கு ரூ.1.84 கோடி மதிப்புள்ள கார் பரிசளித்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவருக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பிரபல பாலிவுட் நடிகர் பரிசாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’தபாங் 3’ இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில் இந்த படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் கிச்சா சுதீப்பின் நடிப்பை பாராட்டி அவருக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் காரை பரிசாக அளித்து உள்ளார் சல்மான் கான்
 
இந்த காரை அவரே நேரடியாக ஓட்டிச்சென்று கிச்சா சுதீப் வீட்டிற்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த பரிசை பார்த்து கிச்சாசுதீப் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து சல்மான் கானுக்கு அவர் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனருக்கு கார் வாங்கி கொடுப்பது தயாரிப்பாளர்களின் வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஒரு திரைப்படத்தின் ஹீரோ தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு கார் வாங்கி கொடுத்து இருப்பது, அதிலும் 1.8 கோடி மதிப்புள்ள கார் வாங்கி கொடுத்து இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது
 
நடிகர் விஜய் நடித்த புலி, சமந்தா நடித்த ‘நான் ஈ’ ஆகிய படங்களில் கிச்சாசுதீப் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது