1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:51 IST)

எனக்கே ரொம்ப அசிங்கமாக இருக்கின்றது: ரசிகரிடம் ஆதங்கப்பட்ட விஜய்

உங்களை இதுவரை நான் சந்திக்காமல் இருந்தது எனக்கு அசிங்கமாக இருக்கின்றது என்று தன்னைப் பார்க்க வந்த ரசிகரிடம் தளபதி விஜய் ஆதங்கத்துடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது 
 
விஜய்யை பார்க்க ஏராளமான ரசிகர்கள் விருப்பப்பட்டாலும், அவரது பிசியான ஷெட்யூலில் காரணமாக அனைத்து ரசிகர்களையும் அவரால் பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பார்வையற்ற தம்பதிகள் நாங்கள் சாவதற்குள் ஒரு முறையாவது விஜயை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றும் விஜய்யை சந்திக்க 20 வருடங்களாக முயற்சித்து வருவதாகவும் கூறி உள்ளனர் 
 
இந்த நிகழ்ச்சியை பார்த்த விஜய்யின் உதவியாளர் உடனடியாக அந்த தம்பதியினரை விஜய்யை சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு சமீபத்தில் நடந்தது சுமார் அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின்போது விஜய் மிகவும் நெகிழ்ச்சியுடன் அந்த தம்பதியை பாராட்டிப் பேசினார். என்னை சந்திக்க நீங்கள் 20 வருடங்களாக முயற்சி செய்திருப்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. இந்த விஷயம் எனக்கு தெரியாமல் இருந்தது எனக்கே அசிங்கமாக இருக்கிறது என்று உணர்வுபூர்வமாக பேசியதும் அந்த தம்பதிகள் நெகழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது