1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:30 IST)

விஜய் என்னிடம் கேட்ட உதவி: மைக் மோகன் வெளியிட்ட ரகசியம்

கடந்த 1990களில் ரஜினி கமல் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோதே வெள்ளி விழாப் படங்களை கொடுத்தவர் நடிகர் மைக் மோகன். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை, இதயகோயில், நான் பாடும் பாடல், உதய கீதம், மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல திரைப்படங்கள் 200 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய படங்களின் வெற்றிக்கு இளையராஜா ஒரு முக்கிய முக்கிய என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்து விலகி இந்த மைக் மோகன் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி செய்ய தயாராக உள்ளார். தற்போது ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது கூறினார் 
 
அப்போது தன்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தன்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் ராஜேந்திரன் என்றும் அவர் அமைத்துக் கொடுத்த அழகான உடைகள் தான் தன்னுடைய படங்களின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தன்னுடைய காஸ்ட்யூம்களை பார்த்து ஆச்சரியப்பட்ட நடிகர் விஜய், அந்த காஸ்ட்யூம் டிசைனரை தனக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் உடனே காஸ்ட்யூம் டிசைனர் ராஜேந்திரனை அவருக்கு அறிமுகப்படுத்தி உதவி செய்ததாகவும் மைக் மோகன் குறிப்பிட்டார். நடிகர் விஜய்க்கு பல ஆண்டுகளாக ராஜேந்திரன் தான் காஸ்ட்யூம் டிசைனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது