1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:16 IST)

விஜய் 62 அப்டேட்: நாயகி இவர்தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி, விஜய் 62 படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 
 
இந்த படத்தில், யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத்தும், கலை பணிகளை சந்தானமும் கவனிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.