திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (23:15 IST)

விஜய் 62; போட்டோஷூட் நடத்திய விஜய் - வைரல் புகைப்படம்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி, ‘விஜய் 62’ படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக்  கூறப்பட்டது. 
இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். 'விஜய் 62' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் சார்பில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த போட்டோஷூட் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவிவருகிறது. இதில் விஜய் மிகவும் ஸ்டைலிஷாக கையில் சூட்கேசை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் விஜய்  ஒரு பிசினஸ்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.