1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (20:14 IST)

தானா சேர்ந்த கூட்டம்: சென்சார் அப்டேட்....

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விக்னேஷ் சிவம் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். 
 
மேலும், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சத்யன் என மிகப்பரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.  
 
இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் டீசர் வரும் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி இருக்கின்றன. 
 
தற்போது படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சார் குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். மேலும் இப்படம் 2 மணிநேரம் 32 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என தெரிகிறது.