மலேசிய நட்சத்திர கலைவிழாவில் விஷாலுக்கு ரெண்டு, விஜய் சேதுபதிக்கு ஒன்று

Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (23:34 IST)
ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்பட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த கலைவிழாவின் இடையில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டிரைலரும், அவர் நடித்த இன்னொரு படமான 'சண்டக்கோழி 2 படத்தின் டீசரும் வெளியிடப்படவுள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. விஷாலின் இரண்டு விழாக்களும், விஜய்சேதுபதியின் ஒரு விழாவும் இந்த நட்சத்திர கலைவிழாவில் நடைபெறவுள்ளதால் விஷால் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :