வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (13:16 IST)

ஆர்ஜே பாலாஜியின் கலகலப்பான காமெடியில் "கீ" படத்தின் வீடியோ!

ஜீவா நடிப்பில் வெளியான பல படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை என்றாலும் தொடர்ந்து நம்பிக்கையோடு நடித்து வருகிறார். 


 
கலகலப்பு 2 படத்தை அடுத்து ஜீவா தற்போது அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில்  'கீ' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் 'குளோபல் இன்போடெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும்  இந்த படத்தில் ஆர்ஜே  பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
விஷால் சந்திரசேகர் இசை அமக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  'யு' சான்று கிடைத்த நிலையில் படம் வெளியாகாமல் இருந்தது. படத்திற்கான ரிலீஸ் தேதிகள் குறித்தும் 'கீ' வெளியாகவில்லை.
 
இந்நிலையில் பல காரணங்களால் தாமதமான இந்த படம் வருகிற மே 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து தற்போது படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி அடிக்கும் கவுன்ட்டர் வசனங்களுக்கு அப்லாஸ் பறக்கிறது. 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.