கபில்தேவை சந்தித்த பிரபல தமிழ் நடிகர்! கிரிக்கெட் படத்திற்காக பயிற்சியா?

Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (06:30 IST)
கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்று தந்தவர் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ். இதனையடுத்து இந்தியா உலகக்கோப்பையை வென்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இவர் நடிக்கும் முதல் இந்தி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவா, உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் பிளேயர் என்பதால் அவர் ஸ்ரீகாந்த் கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் ஜீவா தற்போது கபில்தேவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். மேலும் அவரிடம் இந்த படத்திற்கான பல டிப்ஸ்களையும் ஜீவா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. '83 தி மூவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கபீர்கான் இயக்கி வருகிறார்.,இதில் மேலும் படிக்கவும் :