புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (14:49 IST)

`தல’யுடன் நடிக்கக் காத்திருக்கிறேன்... நடிகர் ஜீவா ஓப்பன் டாக்

அஜித்துடன் நடிக்கக் காத்திருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்திருக்கிறார். 


 
கீ பட ரிலீஸுக்காகக் காத்திருக்கும் ஜீவா, ராஜுமுருகன் இயக்கியிருக்கும் ஜிப்ஸி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதேபோல் காளிஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கீ. இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆர்ஜே பாலஜி, அனைகா உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். 
 
படம் குறித்து பேசிய ஜீவா, கீ படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. பல்வேறு காரணங்களால் படம் தள்ளிப்போனது. கீ படம். மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடமும் பெண்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும். ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் ஆபத்துகள் அதைக் கொண்டு நம்முடைய அடிப்படை  எப்படி திருடுகிறார்கள் என்பதை  சொல்லும் படமாக இருக்கும். இந்தப் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பையும் காமெடியையும் வழங்கியிருக்கிறார். ஆனாலும் கூட இப்போது வரை சந்தானத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன். 
 
விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமையவேண்டும் என்று காத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார் ஜீவா.