கிரிக்கெட்டராக ஜீவா – ரன்வீர், தீபிகா படத்தில் வாய்ப்பு

Last Modified செவ்வாய், 8 ஜனவரி 2019 (09:15 IST)
பாலிவுட்டில், 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல்முதலாக உலகக்கோப்பையை வென்றதை மையமாக வைத்து புதியப் படம் ஒன்று தயாராகிறது. அதில் நடிக்க ஜீவா ஒப்பப்ந்தமாகியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயம் 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் எழுதப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க அந்த போட்டியின் வெற்றிப் பெற்று இந்தியா கிரிக்கெட் உலகில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்தது.

இந்த உலகக்கோப்பைத் தொடரை மையமாக வைத்து பாலிவுட்டில் புதிய படம் ஒன்று தயாராகிறது. அதில் கேப்டன் கபில்தேவ் வேடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  கபில் தேவ்வின் மனைவி ரோமி பாட்டியா கதாபாத்திரத்தில் நடிக்க தீபிகா படுகோனை நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருமணத்திற்குப் பிறகு ரன்வீரும் தீபிகாவும் இணைந்து நடிக்கும் முதல்படமாக இந்தப்படம் இருக்கும்.

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்குபெற்ற இந்திய அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க தமிழ் நடிகர் ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். ஜீவா நிஜ வாழ்க்கையிலும் கிரிக்கெட் வீரர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :