உலகக்கோப்பை கிரிக்கெட் படத்தில் ஜீவா

Last Modified திங்கள், 7 ஜனவரி 2019 (08:44 IST)
கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. கபில்தேவ் தலைமையில் பெற்ற இந்த கோப்பையை மையமாக வித்து '83' என்ற திரைப்படம் பாலிவுட்டில் உருவாகி வருகிறது.

கபீர்கான் இயக்கி வரும் இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்க நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த படம் உருவாக
உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த அனைத்து வீரர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் குறிப்பாக ரன்வீர்சிங் கேரக்டருக்கான ஐடியாவை கபில்தேவ் அவர்கள் தானாகவே முன்வந்து கொடுத்ததாகவும் இயக்குனர் கபீர்கான் தெரிவித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இதில் மேலும் படிக்கவும் :