செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (17:17 IST)

தேர்தல் தோல்விக்குப் பின் அமேதியில் ராகுல் – நிர்வாகிகளுடன் ஆலோசனை !

தேர்தல் தோல்விக்குப் பின் தான் போட்டியிட்ட அமேதி தொகுதிக்கு முதன்முதலாக சென்றுள்ளார் ராகுல்காந்தி.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

அமேதி தொகுதியில் அதற்கு முன் 3 முறை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்விக்குப் பிறகு முதன்முறையாக இன்று ராகுல் காந்தி அமேதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு இன்று தோல்வி குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.