தொடர்புடைய செய்திகள்
- ராமாயணம் படத்தில் எனக்குப் பதில் சாய் பல்லவியா?... கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!
- ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட ரிலீஸ்!
- ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?
- ராமாயணம் படத்தில் இணைந்த யாஷ்.. முக்கியக் காட்சிகள் படமாக்கம்!
- டாக்ஸிக் கதை உணரப்பட வேண்டியது… இயக்குனர் கீது மோகன்தாஸ் கருத்து!
இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க யாஷ் 200 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அளவில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒரு நடிகர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுவாகதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அவர் கதாபாத்திரத்தின் மனைவியான மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
