திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:23 IST)

மத்திய, மாநில அரசுகளுக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய நிதியுதவி!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியா முழுவதும் பாதித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு தாராளமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி செய்ய வேண்டுமென பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் டாடா, ரிலையன்ஸ் உள்பட பலரும் மிகப் பெரிய தொகைகளை நிவாரண உதவியாக அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியுதவி செய்வதில் திரையுலக பிரபலங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் கோடிக்கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் திரையுலகினர் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கொடுத்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தல அஜித் அவர்கள் ரூபாய் 1.25 கோடி நிவாரண உதவி செய்துள்ளார். இதில் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுத்துள்ளார். மேலும் ரூபாய் 25 லட்சம் பெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காக அவர் நிதி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் இந்த மிகப்பெரிய உதவியை தமிழக ஊடகங்கள் பாராட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது