திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (13:48 IST)

நாங்கலாம் அப்போவே சொன்னோம் "விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்" - கஸ்தூரி கலாய்!

சீனாவில் இருந்து பரவிய கொடூர வைரஸ் தொற்று     இந்தியா முதற்கொண்டு பல்வேறு நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடுமுழுக்க வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டுன காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா இருளை அகற்ற வரும் ஞாயிற்று கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கு அல்லது டார்ச், செல்போன் டார்ச் அடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்மா படத்தில் இடம்பெற்ற " விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்" என்ற பாடல் வீடியோவை வெளியிட்டு நாங்கலாம் அப்பவே சொன்னது.. என கூறி கிண்டலடித்துள்ளார். இந்த பாடலுக்கு கஸ்தூரி நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.