1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:47 IST)

பஸ் பயணத்தில் நடந்த சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை ஆதங்கம்!

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய கல்லூரி காலத்தில் பேருந்துகளில் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்துக் கூறியுள்ளார்.

தமிழில் விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அஜித்தோடு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் கொரோனா எச்சரிக்கை அதிகமாகியுள்ள நிலையில் இப்போது தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

 மார்ச் 16 ஆம் தேதி அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் பின்னர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் அவர் பயணம் மேற்கொண்டதால் அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லியுள்ளனர். இதையடுத்து தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட நேற்று அவர் சமூகவலைதளத்தில் லைவ்வாக பேசினார்.

அப்போது கல்லூரி காலத்தில் பேருந்துகளில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் நிர்பயா வழக்கு தொடர்பான ஒரு வெப் சீரிஸை பார்த்து அதிர்ந்து போனேன். பஸ் பயணத்தில் கூட்டத்துக்குள் சிக்கும் பெண்கள் பல கொடுமைகளை தினமும் அனுபவிக்கின்றனர். அதை நானும் கல்லூரியில் படித்த காலத்தில் அனுபவித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் யுத்தத்துக்கு செல்வது போல செல்வேன். யாராவது சில்மிஷம் செய்வார்களோ என்ற அச்சத்திலேயே இருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.