1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:58 IST)

அஜித் செய்த அடுத்த நிதியுதவி: யாருக்கு தெரியுமா?

தல அஜித் அவர்கள் கொரோனா நிவாரண நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் நிதியுதவி செய்தார் என்று சற்றுமுன் பார்த்தோம்
 
அதேபோல் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் வறுமையில் வாடும் பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்காக ரூபாய் 25 லட்சம் அவர் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக பிஆர்ஓ யூனியன் அமைப்பினர்களுக்கு தல அஜித் ரூ. 2.5 லட்சம் நிதி உதவி செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதுமட்டுமின்றி இன்னும் சிலருக்கு அவர் நிதி உதவி செய்ய இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் முதல்வர் நிவாரண நிதியுதவி, பிரதமர் நிவாரண நிதி மற்றும் பி.ஆர்.ஓ யூனியன் நிவாரண நிதியை ஆகியவை வழங்கவில்லை என்பதும் தல அஜித் மட்டுமே முதல் முறையாக முதல் நபராக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது