திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (07:27 IST)

விஜய் ரசிகர்கள் மீது கமிஷனர் ஆபிஸில் புகார் அளிக்க கருணாகரன் முடிவு

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை கருணாகரன் கடுமையாக விமர்சித்தார்.



“குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை,  மறைமுகமாக சாடினார் .

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர், செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கருணாகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் ரசிகர்கள் மீது திங்கட்கிழமை அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன்  தெரிவித்துள்ளார்.