வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (17:41 IST)

’தீ இவன் ‘ படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகும் நவரச நாயகன் கார்த்திக் !

கார்த்திக் நீண்ட நாட்களுக்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கும் தீ இவன் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

அரசியல் ஆர்வம் மற்றும் சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் கார்த்திக் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அரசியல் கை கொடுக்காததால் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவருக்கு குணச்சித்திர வேடங்களும் வில்லன் வேடங்களுமே கிடைத்தது.

அவரது குடும்பத்தில் இருந்த அடுத்த ஹீரோவாக கௌதம் கார்த்திக் அறிமுகமாகி குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளார். தன் மகனோடு சேர்ந்து மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கார்த்திக் நடித்தார். இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் தீ இவன் என்ற  படத்தில் கார்த்திக்கும் அவரது தங்கையாக சுகன்யாவும் நடிக்க இருக்கிறார்கள். இவர்களைத் தவிர இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் டி எம் ஜெயமுருகன் இயக்க உள்ளார்.