புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:52 IST)

வேடன் வந்தாச்சோ..."மாஃபியா" பட வீடியோ பாடல் ரிலீஸ்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா  "வேடன் வந்தாச்சோ" வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. 
 
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பியவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதனை தொடர்ந்து அரவிந்த் சுவாமியை ஹீரோவாக வைத்து நரகாசுரன் படத்தை இயக்கினார். ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
 
இதற்கிடையில் அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசரை பார்த்துவிட்டு கார்த்திக் நரேனையும் படக்குழுவினரையும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் என மூவரும் துடிப்பான ஆக்ஷன் காட்சிகளில் வெறித்தனமாக போட்டிபோட்டு நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் இடம்பெற்றுள்ள  "வேடன் வந்தாச்சோ" என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.