1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (09:54 IST)

தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறதா? ரசிகர்கள் குஷி

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சுருளி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது ‘சுருளி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் இதுகுறித்து ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் இந்திய அளவில் டிரெண்ட் கொண்டுவந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் ’சுருளி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு இருக்கும் நிலையில் தற்போது இன்று முதல் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்க இருப்பதாகவும் அதன் முதல் பகுதியாக இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் இன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து டீசர், டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு என அடுத்தடுத்த புரமோஷன் பணிகளை படக்குழுவினர் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ் ஜோடியாக சஞ்சனா நடித்துள்ள இந்த படத்தில் இரண்டாம் நாயகையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது