செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 10 மே 2020 (20:08 IST)

சத்தமில்லால் வந்திறங்கியது "விண்ணைத்தாண்டி வருவாயா 2" படத்தின் டீசர்..!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கார்த்திக் டயல் செய்த எண்." என்ற குறும்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடித்துள்ள இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உணர முடிகிறது. காரணம் கார்த்திக் கதாபாத்திரத்துடன் ஜெஸி பேசுகிறார். கூடவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையுடன் இந்த டீசர் முடிவடைகிறது.

இது குறித்து இயக்குனர் கெளதம் மேனன் கூறியதாவது, விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஒரு பகுதி தான் இந்த குறும்படம். இதில் நடிகர் சிம்பு தான் ஹீரோவா..? படத்தின் இசைமைப்பாளர் யார்..? என உங்களுக்கு எழும் அனைத்து கேள்விகளுக்கும் சஸ்பென்ஸ் மட்டுமே என்னுடைய பதில். இன்னும் ஒரு  சில நாட்களில் இந்த குறும்படம் ரிலீஸ் ஆகும். பார்த்துவிட்டு தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.