வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 4 மே 2020 (14:15 IST)

ஊரடங்கில் சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை த்ரிஷா - குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா இன்று தனது  37வது பிறந்தநாளை கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே சிம்பிளாக கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் , பிரபலங்கள் , நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்ட்ட்றனர். 1999ல் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த த்ரிஷா பின்னர் 2002ல் வெளிவந்த "மௌனம் பேசியதே" படத்தின் மூலம் கதாநாயகியாக தடம் பதித்தார். முதல் ப
 
டமே மெகா ஹிட் அடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் அமர்ந்தார்.

அதையடுத்து லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 , சாமி, கில்லி, திருப்பாச்சி ,ஆறு , ஆதி உள்ளிட்ட பல தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழின் உட்சத்தில் இருந்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்த த்ரிஷா சமீப நாட்களாக கதா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்து வருகிறார். இதே போல் மென்மேலும் வளர்ந்து தொடர்ந்து இளசுகளின் கனவு கன்னியாகவே வளம் வர வாழ்த்துகிறோம் த்ரிஷா அவர்களே....ஹேப்பி பொறந்தநாள் வாழ்த்துக்கள்...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trisha celebrating her birthday at home. #HBDSouthQueenTrisha

A post shared by Trisha Krishnan FC (@actresstrisha) on